டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்துக்கு 160 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து

செய்ஃபெர்ட் 25 பந்தில் 35 ரன்களும், பின் ஆலன் 19 பந்தில் 29 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.கிளென் பிளிப்ஸ் 28 பந்தில் 39 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்துக்கு 160 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து
Published on

டி20 உலகக் கோப்பை குரூப் 8 சுற்றில், இன்று கொழும்பில் நடைபெற்று வரும் போட்டியில் குரூப் 2-ல் இடம் பிடித்துள்ள இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பை உறுதிப்படுத்தி விடலாம் என்ற முனைப்போடு நியூசிலாந்து களம் இறங்கியது. இங்கிலாந்து ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணியின் டிம் செய்பெர்ட், ஃபின் ஆலன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் முதலில் நிதானமாக விளையாடினர். அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

செய்ஃபெர்ட் 25 பந்தில் 35 ரன்களும், பின் ஆலன் 19 பந்தில் 29 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த ரச்சின் ரவீந்திரா 11 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.

மறுமுனையில் விக்கெட்டுகள் மளமளவென விழுந்த நிலையில், கிளென் பிளிப்ஸ் தாக்குப்பிடித்து 28 பந்தில் 39 ரன்கள் எடுத்து வெளியேறினார். டேரில் மிட்செல் 3 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அடைந்தார்.

நியூசிலாந்து 17.1 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்திருந்தது. 18-வது ஓவரை ஜேக்ஸ் (7 ரன்), 19-வது ஓவரை அதில் ரஷித் (5 ரன்) அபாரமாக வீசினர். கடைசி ஓவரை ரேஹன் அகமது வீசினார். இந்த ஓவரில் நியூசிலாந்து 12 ரன்கள் அடிக்க 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து அணி சார்பில் 7 வீரர்கள் பந்து வீசினர். இதில் அதில் ரஷித், வில் ஜேக்ஸ், ரேஹன் அகமது தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com