டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று: இலங்கைக்கு 147 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து

சூப்பர் 8 சுற்றின் 2 ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதி வருகின்றன. சிறப்பாக விளையாடிய பில் சால்ட் 62 ரன்கள் அடித்து அவுட்டானார்.
டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று: இலங்கைக்கு 147 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து
Published on

டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் சூப்பர் 8 சுற்று நேற்று தொடங்கியது.

முதல் போட்டியில் நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோத இருந்த நிலையில் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

சூப்பர் 8 சுற்றின் 2 ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதுகின்றன. கண்டியில் இன்று நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது

அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி இலங்கை அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரன் குவிக்க முடியாமல் தடுமாறியது. மற்ற அனைத்து வீரர்களும் ரன் குவிக்க முடியாமல் திணற மறுமுனையில் சிறப்பாக விளையாடிய பில் சால்ட் 62 ரன்கள் அடித்து அவுட்டானார்.

20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிக்கிற 146 ரன்கள் அடித்தது. இலங்கை தரப்பில் துனித் வெல்லாலகே 3 விக்கெட்டுகளும் தீக்சனா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com