நியூசிலாந்து பவுலிங்கை சிதறடித்த மார்க்கிராம்: தென்ஆப்பிரிக்கா அசத்தல் வெற்றி

மார்க்கிராம் ஆட்டமிழக்காமல் 44 பந்தில் 86 ரன்கள் குவித்தார்.தென்ஆப்பிரிக்கா 17.1 ஓவரில் இலக்கை எளிதாக எட்டியது.
நியூசிலாந்து பவுலிங்கை சிதறடித்த மார்க்கிராம்: தென்ஆப்பிரிக்கா அசத்தல் வெற்றி
Published on

டி20 உலகக் கோப்பையில் இன்றைய 3-வது போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி நியூசிலாந்து முதலில் களம் இறங்கி 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் பின் ஆலன் 17 பந்தில் 31 ரன்கள் விளாசினார். மார்க் சாப்மேன் 26 பந்தில் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். யான்சன் 4 ஓவரில் 40 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.

பின்னர் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்காவின் மார்க்கிராம்- குயின்டன் டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மார்க்கிராம் தொடக்கம் முதல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டி காக் 14 பந்தில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 3 ஒவரில் தென்ஆப்பிரிக்கா 50 ரன்னைத் தொட்டது. மார்க்கிராம் 19 பந்தில் அரைசதம் அடித்தார். ரிக்கெல்டன், டெவால்டு பிரேவிஸ் தலா 21 ரன்கள் சேர்த்தனர்.

மார்க்கிராம் ஆட்டமிழக்காமல் 44 பந்தில் 86 ரன்களும், டேவிட் மில்லர் 17 பந்தில் 24 ரன்களும் அடிக்க தென்ஆப்பிரிக்கா 17.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com