டி20 உலகக் கோப்பை அரையிறுதி: நியூசிலாந்து பந்து வீச்சு தேர்வு #T20 World Cup Semi Final

கொல்கத்தாவில் வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 196 இலக்கை இந்தியா சேசிங் செய்தது.இதனால் தென்ஆப்பிரிக்கா 200 ரன்களுக்கு மேல் குவிக்க திட்டமிட்டிருக்கலாம்.
டி20 உலகக் கோப்பை அரையிறுதி: நியூசிலாந்து பந்து வீச்சு தேர்வு #T20 World Cup Semi Final
Published on

டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது. இதில் தென்ஆப்பிரிக்கா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. தென்ஆப்பிரிக்கா தோல்வியை சந்திக்காமல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்து இலங்கை புண்ணியத்தால் (பாகிஸ்தானுக்கு எதிராக 147 ரன்களை எட்டியது) அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கடைசியாக நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இந்தியா 196 இலக்கை எட்டி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தென்ஆப்பிரிக்கா அணியில் 3 மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com