T20 World Cup Final | பவர்பிளேயில் தெறிக்கவிட்ட அபிஷேக்- சஞ்சு: விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள்

சஞ்சு சாம்சன் 17 பந்தில் 33 ரன்கள்.அபிஷேக் சர்மா 19 பந்தில் 51 ரன்கள்.
T20 World Cup Final | பவர்பிளேயில் தெறிக்கவிட்ட அபிஷேக்- சஞ்சு: விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள்
Published on

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் சான்ட்னெர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. நியூசிலாந்து அணியில் மெக்கோன்சி நீக்கப்பட்டு டஃபி சேர்க்கப்பட்டார்.

சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார். முதல் ஓவரை டஃபி வீசினார். சஞ்சு சாம்சன் முதல் 4 பந்துகளில் ரன்ஏதும் எடுக்கவில்லை. 5-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார். கடைசி பந்தில ஒரு ரன் எடுத்தார். இதனால் இந்தியாவுக்கு முதல் ஓவரில் 7 ரன்கள் கிடைத்தன.

2-வது ஓவரை பிளிப்ஸ் வீசினார். இந்த ஓவரில் அபிஷேக் சர்மா கவனமாக விளையாடினார். இந்த ஓவரில் பவுண்டரி அல்லது சிக்சர் கிடைக்கவில்லை. இதனால் 5 ரன்கள் மட்டுமே கிடைத்தன.

3-வது ஓவரை டஃபி வீசினார். இந்த ஓவரில் அபிஷேக் சர்மா 2 பவுண்டரியும், சஞ்சு சாம்சன் ஒரு பவுண்டரியும் அடித்தனர். இதனால் இந்தியாவுக்கு 15 ரன்கள் கிடைத்தன.

4-வது ஓவரை பெர்குசன் வீசினார். முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய அபிஷேக் சர்மா, அடுத்த பந்தை சிக்சருக்கு தூக்கினார். 4-வது பந்தை சஞ்சு சாம்சன் சிக்சருக்கு தூக்கினார். ஆஃப்சைடு அடிக்க முயன்ற பந்து எட்ஜ் ஆகி லெக்சைடு சிக்சருக்கு பறந்தது. கடைசி பந்தை சாம்சன் பவுண்டரிக்க விரட்டினார். இந்த ஓவரில் இந்தியாவுக்கு 24 ரன்கள் கிடைத்தன. இதனால் 4 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் குவித்தது.

5-வது ஓவரை ஹென்றி வீசினார். இந்த ஓவரில் 4 வைடு வீசினார். அபிஷேக் மற்றும் சஞ்சு தலா ஒரு சிக்ஸ் அடித்தனர். இதனால் 21 ரன்கள் கிடைத்தன. 5 ஓவரில் இந்தியா 72 ரன்கள் குவித்தது.

6-வது ஓவரை டஃபி வீசினார். முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய அபிஷேக் சர்மா, அடுத்த பந்தை சிக்சருக்கு தூக்கினார். அடுத்த பந்தை தூக்கி அடித்தார். பந்து வானத்தை நோக்கி சென்றது. ஆனால் பீல்டரால் அதை பிடிக்க முடியவில்லை. அடுத்த பந்தையும் அதேபோல் அடித்தார். பீல்டர் பிடிக்கவில்லை. 5-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி 18 பந்தில் அரைசதம் விளாசினார். கடைசி பந்தில் ரன்ஏதும் எடுக்கவில்லை.

இந்தியா பவர்பிளேயான முதல் 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் குவித்தது. இந்த உலகக் கோப்பையில் பவர்பிளேயில் அதிகப்படியான ஸ்கோர் இதுவாகும். சஞ்சு சாம்சன் 17 பந்தில் 33 ரன்களுடனும், அபிஷேக் சர்மா 19 பந்தில் 51 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com