டி20 உலகக் கோப்பை 2026: ஜிம்பாப்வே அணியில் சாம் கரண் சகோதரர்

தசைப் பிடிப்பு காரணங்களால் பிரண்டன் டெய்லர் விலகியுள்ளார். இங்கிலாந்து நட்சத்திர வீரர்களான சாம் கரண், டாம் கரண் ஆகியோரின் சகோதரர் பென் கரண்.
டி20 உலகக் கோப்பை 2026: ஜிம்பாப்வே அணியில் சாம் கரண் சகோதரர்
Published on

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் நடத்துகின்றன. இந்த தொடரில் ஜிம்பாப்வே அணி 2 போட்டிகளில் விளையாடி 2 போட்டியிலும் வெற்றி பெற்று அந்த குரூப்-ல் 2-வது இடத்தில் உள்ளது. இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து நட்சத்திர வீரர்களான சாம் கரண் மற்றும் டாம் கரண் ஆகியோரின் சகோதரரான பென் கரண் ஜிம்பாப்வே அணியில் இணைந்துள்ளார். விக்கெட் கீப்பர் பேட்டரான பிரெண்டன் டெய்லருக்கு பதிலாக பென் கரண் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஜிம்பாப்வே அணி தனது முதல் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்றபோது விளையாடிய பிரண்டன் டெய்லர் (40 வயது) தற்போது தசைப் பிடிப்பு காரணங்களால் விலகியுள்ளார்.

கடந்த 2004-ல் அறிமுகமான பிரண்டன் டெய்லர் இதுவரை 36 டெஸ்ட், 207 ஒருநாள், 59 டி20 போட்டிகளில் ஜிம்பாப்வே அணிக்காக விளையாடியுள்ளார்.

பென் கரண் நல்ல ஆல்ரவுண்டர் என்பதால், ஜிம்பாப்வே அணிக்கு கூடுதல் பலத்தைச் சேர்ப்பார் எனக் கருத்தப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com