டி20 தொடர்: கடைசி போட்டியில் வென்று இலங்கைக்கு எதிரான தொடரை 2-1 எனக் கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ்

ஷமர் ஜோசப் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதுடன், தொடர் நாயகன் விருதையும் வென்றார்.
டி20 தொடர்: கடைசி போட்டியில் வென்று இலங்கைக்கு எதிரான தொடரை 2-1 எனக் கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ்
Published on

இலங்கை அணி மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் போட்டியில் இலங்கை 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது மற்றும் 3-வது போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதனால் இலங்கை ஒருநாள் தொடர 1-0 எனக் கைப்பற்றியது.

டி20 தொடர்

அதன்பின் டி20 தொடர் நடைபெற்றது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது. இந்த நிலையில் 3-வது மற்றும் கடைசி போட்டி இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை சரியாக 20 ஓவரில் 169 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

துனித் வெலாலகே அதிகபட்சமாக 43 ரன்கள் அடித்தார். பதுன் நிசாங்கா (26), குசால் மெண்டிஸ் (5), கமில் மிஷாரா (28), பவன் ரத்நாயகே (0), கமிந்து மெண்டிஸ் (20) சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஷமர் ஜோசப் சிறப்பாக பந்து வீசி 4 ஓவிரில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.

170 ரன்கள் இலக்கு

பின்னர் 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் பிராண்டன் கிங் (16), ஷாய் ஹோப் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

ஷிம்ரன் ஹெட்மையர் 19 பந்தில் 32 ரன்கள் விளாசினார். ரோவ்மேன் பொவேல் 27 பந்தில் 33 ரன்கள் சேர்த்தார். ரூதர்போர்டு ஆட்டமிழக்காமல் 40 பந்தில் 54 ரன்கள் அடிக்க வெஸ்ட் இண்டீஸ் 2 பந்துகள் மீதமிருக்கையில் 170 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் 2-1 என் கைப்பற்றியது. ஷமர் ஜோசப் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்றார்.

டெஸ்ட் தொடர்

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com