டி20 தொடர்: முதல் போட்டியில் ஆஸ்திரேலியா மகளிர் அணியை எளிதாக வீழ்த்தியது இந்தியா..!

ஆஸ்திரேலியா அணி 133 ரன்னில் சுருண்டது.அருந்ததி ரெட்டி 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.
டி20 தொடர்: முதல் போட்டியில் ஆஸ்திரேலியா மகளிர் அணியை எளிதாக வீழ்த்தியது இந்தியா..!
Published on

இந்திய மகளிர் அணி மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலிய வீராங்கனைகள் இந்தியாவின் அருந்ததி ரெட்டியின் (4 விக்கெடெ்) பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 133 ரன்னில் சுருண்டனர். 18 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்தனர். ஸ்ரீ சரணி மற்றும் ரேனுகா சிங் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 134 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய வீராங்கனைகள் களம் இறங்கினர். தொடக்க வீராங்கனையாக களம் இறங்கிய ஷபாலி வர்மா 11 பந்தில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தியா 5.1 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை பெய்தது.

நீண்ட நேரம் மழை பெய்ததால் போட்டியை நடத்த முடியாது என நடுவர்கள் அறிவித்தனர். இதனால் டக்வொர்த் லீவிஸ் விதி கடைபிடிக்கப்பட்டது. அதன்படி இந்தியா 5.1 ஓவரில் 29 ரன்கள் எடுத்தால் போதுமானது என்று அறிவிக்கப்பட்டது. இதனால் இந்தியா 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்மிரிதி மந்தனா 16 ரன்களுடனும், ரோட்ரிக்ஸ் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

4 விக்கெட் வீழ்த்திய அருந்ததி ரெட்டி பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருதை வென்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com