திடீர் ஓய்வை அறிவித்த நியூசிலாந்து வீராங்கனை

மகளிர் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனையாக திகழ்கிறார்.
திடீர் ஓய்வை அறிவித்த நியூசிலாந்து வீராங்கனை
Published on

மகளிர் கிரிக்கெட்டின் சிறந்த வீராங்கனைகளில் ஒருவரான நியூசிலாந்தின் சூசி பேட்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற உள்ள 2026 மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரே இவரது கடைசி சர்வதேச தொடராக இருக்கும்.

கடந்த 2003-ல் உள்நாட்டு கிரிக்கெட்டில் அறிமுகமான சூசி பேட்ஸ், 2006-ம் ஆண்டு நியூசிலாந்து தேசிய அணிக்காக அறிமுகமானார்.

சுமார் 20 ஆண்டாக நியூசிலாந்து அணிக்காக விளையாடிய அவர் பல சாதனைகளைப் படைத்துள்ளார்.

2011 முதல் 7 ஆண்டு நியூசிலாந்து அணி கேப்டனாக இருந்தார்.

மகளிர் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனையாக திகழ்கிறார் (4,717 ரன்கள்).

ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளார். (5,964 ரன்கள்).

இந்நிலையில், ஓய்வு குறித்துப் பேசிய சூசி பேட்ஸ், 20 ஆண்டு இவ்வளவு சீக்கிரம் கடந்துவிட்டதை நம்ப முடியவில்லை. நியூசிலாந்து சீருடையை அணிந்ததற்காக பெருமைப்படுகிறேன். இங்கிலாந்தில் மீண்டும் ஒருமுறை உலகக் கோப்பை வென்று, வெற்றிகரமாக விடைபெறுவதே எனது இறுதி லட்சியம் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com