அபிஷேக் சர்மா குறித்த கேள்வி: சூர்யகுமார் அளித்த 'நச்' பதில்

அபிஷேக் சர்மாவை எதிர்கொள்ளப் போகும் எதிரணிகளை நினைத்துதான் கவலைப்படுகிறேன். கடந்த ஆண்டு அவர் பல போட்டிகளில் இந்திய அணிக்காக ரன் குவித்தார் என்றார்.
அபிஷேக் சர்மா குறித்த கேள்வி: சூர்யகுமார் அளித்த 'நச்' பதில்
Published on

புதுடெல்லி:

டி20 உலகக் கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்றுகள் நடந்து வருகின்றன. சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்டது.

இதற்கிடையே, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 8 போட்டிக்கு முன் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அபிஷேக் சர்மாவின் பார்ம் குறித்து கவலைப்படுபவர்களைக் கண்டு நான் கவலைப்படுகிறேன்.

அவரது ஆட்டத்தை நினைத்து ஏன் இவ்வளவு கவலைப்படுகிறீர்கள்? அவர் இன்னும் ரன் அடிக்கத் தொடங்கவில்லை என்பதால், இனி அவரை எதிர்கொள்ளப் போகும் எதிரணிகளை நினைத்துதான் நான் கவலைப்படுகிறேன். அவர் பெரிய ஷாட்களை ஆடத் தொடங்கினால் என்ன நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியும்.

இது ஒரு குழு விளையாட்டு. அணியின் தேவைக்கேற்ப அவர் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்கிறார்.

அவர் சிறப்பாக ஆடினால் மகிழ்ச்சி. தவறினால் அதை ஈடுகட்ட நாங்கள் இருக்கிறோம்.

கடந்த ஆண்டு அவர் பல போட்டிகளில் இந்திய அணிக்காக ரன் குவித்தார். இந்த முறை அவருக்காக நாங்கள் அதைச் செய்வோம் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com