நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் படைத்த அசத்தலான சாதனை

நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் படைத்த அசத்தலான சாதனை
Published on

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி கடந்த மே 15-ஆம் தேதி வெளியான திரைப்படம் கருப்பு. பலமுறை ரிலீஸ் தேதி மாற்றப்பட்ட நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான கருப்பு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

திரையரங்குகளில் இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், கருப்பு திரைப்படத்தின் வசூல் ரூ. 500 கோடியை நெருங்கி வருகிறது. ஏற்கனவே இந்தப் படம் வசூலில் ரூ. 300 கோடியை கடந்ததாக சமீபத்தில் படக்குழு புது போஸ்டர் வெளியிட்டு அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், வசூலை தாண்டி தமிழ்நாட்டில் மட்டும் கருப்பு திரைப்படத்தை பார்க்க ஒரு கோடிக்கும் அதிகமானோர் திரையரங்குகள் நோக்கி படையெடுத்துள்ளனர். இது குறித்து படத்தயாரிப்பு நிறுவனம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

அந்த பதிவில், "சூர்யாவின் கருப்பு, தமிழ்நாட்டில் 1 கோடி பார்வையாளர்களை கடந்து, தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல் வெற்றியாக மாறியுள்ளது!

அரங்கு நிறைந்த காட்சிகள் முதல் ஆரவாரமான கொண்டாட்டங்கள் வரை, இது வெறும் ஒரு பிளாக்பஸ்டர் மட்டுமல்ல — இது ரசிகர்களின் அன்பால் உந்தப்பட்ட ஒரு இயக்கம்.

தமிழ் சினிமாவுக்கு இது ஒரு மகத்தான சாதனை மற்றும் ஒவ்வொரு #கருப்பு ஆதரவாளருக்கும் இது ஒரு பெருமைக்குரிய தருணம்!," என குறிப்பிடப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com