

பாகிஸ்தான் அணியின் மூத்த தேர்வாளரான அக்யுப் ஜாவித் முன்னாள் வீரர்களைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
இதுதொடர்பாக, ஜாவித் கூறுகையில், குளிரூட்டப்பட்ட அறைகளுக்குப் பதிலாக கிரிக்கெட் மைதானத்திற்கு வரவேண்டும்.
ஓய்வுபெற்ற வீரர்கள் தொலைக்காட்சியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தையும், தேசிய அணியையும் தொடர்ந்து தாக்கிப் பேசும் போக்கு அதிகரித்து வருகிறது.
தொடர்ச்சியான விமர்சனம் என்பது ஊடகங்களின் வேலை. அடுத்த தலைமுறையை உருவாக்கும் நிபுணத்துவம் கொண்டவர்களின் வேலை அல்ல என காட்டமாகத் தெரிவித்தார்.