ஆகஸ்ட் மாத சிறந்த வீரர், வீராங்கனை விருதுகளை வென்ற இலங்கை

ஆகஸ்ட் மாத சிறந்த வீரருக்கான விருது துனித் வெல்லாலகேவுக்கு அளிக்கப்பட்டது. சிறந்த வீராங்கனைக்கான விருதினை இலங்கை அணியின் ஹர்ஷிதா வென்றார்.
ஆகஸ்ட் மாத சிறந்த வீரர், வீராங்கனை விருதுகளை வென்ற இலங்கை
Published on

துபாய்:

ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி. கவுரவித்து வருகிறது.

ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி அறிவித்தது.

வீரர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீசின் ஜெய்டன் சீல்ஸ், தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மகராஜ், இலங்கையின் துனித் வெல்லாலகே ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தின் சிறந்த வீரராக இலங்கையின் துனித் வெல்லாலகே தேர்வு செய்யப்பட்டார். இதேபோல், சிறந்த வீராங்கனையாக இலங்கையின் ஹர்ஷிதா மாதவி தேர்வு செய்யப்பட்டார்.

ஆகஸ்ட் மாதத்தின் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுகளை இலங்கை அணி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com