சூர்யவன்ஷி ருத்ர தாண்டவம்: இலங்கை வெற்றிபெற 378 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

இந்திய அணியின் சூர்யவன்ஷி 29 பந்தில் 94 ரன்கள் குவித்தார்.
sooryavanshi
Published on

இலங்கை, இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் முத்தரப்பு ஏ ஒருநாள் தொடர் இலங்கையில் நடந்து வருகிறது.

லீக் போட்டிகளின் முடிவில் இந்தியா, இலங்கை அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இந்நிலையில், இலங்கையில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இலங்கை, இந்தியா அணிகள் மோதின. தம்புல்லாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக ஆடினார். அவர் 11 பந்துகளில் 5 சிக்சர், 5 பவுண்டரி விளாசி அரை சதம் கடந்து அசத்தினார். முதல் தர கிரிக்கெட் போட்டியில் சூர்யவன்ஷி 11 பந்தில் அரை சதம் கடந்து சாதனை படைத்துள்ளார்.

சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 29 பந்தில் 94 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

கெய்க்வாட் 40 ரன்னும், பிரியான்ஷ் ஆர்யா 39 ரன்னும் சேர்த்தனர்.

தொடர்ந்து பொறுப்புடன் ஆடிய திலக் வர்மா அரை சதம் கடந்து 67 ரன்கள் எடுத்தார். நடப்பு தொடரில் திலக் வர்மா அடிக்கும் 4வது அரை சதமாகும்.

இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 377 ரன்கள் குவித்தது.

இதையடுத்து, 378 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்குகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com