PSL-யை விட குறைந்த ஊதியத்திற்கு IPL-ல் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஜான்சன்

அதிக தொகைக்கு ஒப்பந்தமான பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இருந்து விலகி அதைவிட குறைந்த தொகைக்கு ஐபிஎல் தொடரில் விளையாட அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
PSL-யை விட குறைந்த ஊதியத்திற்கு IPL-ல் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஜான்சன்
Published on

ஐபிஎல் 2026 சீசன் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளது. இந்த தொடருக்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பயிற்சியில் ஈடுபடும் வீரர்கள் காயம் காரணமாக விலகி வருகின்றனர். அந்த வகையில் சிஎஸ்கே அணியில் இருந்து காயம் காரணமாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் நாதன் எல்லிஸ் சில தினங்களுக்கு முன்னர் விலகி உள்ளார். அவருக்கு மாற்றாக, மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான ஸ்பென்சர் ஜான்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அதிக தொகைக்கு ஒப்பந்தமான பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இருந்து விலகி அதைவிட குறைந்த தொகைக்கு ஐபிஎல் தொடரில் விளையாட அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அவர் பாகிஸ்தான் சூப்பர் லீக் 2026 தொடரில் விளையாட குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அவருக்கு அங்கு சுமார் ரூ 1.88 கோடி ஊதியம் பேசப்பட்டிருந்தது. இருப்பினும், "தனிப்பட்ட காரணங்களை" சுட்டிக்காட்டி மார்ச் 15 அன்று அந்தத் தொடரிலிருந்து அவர் திடீரென விலகினார்.

தற்போது, அந்தத் தொகையை விடக் குறைவாக, அதாவது ரூ.1.50 கோடிக்கு சிஎஸ்கே அணியில் மாற்று வீரராக அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதிக ஊதியம் கிடைக்கும் தொடரைத் தவிர்த்துவிட்டு, குறைவான ஊதியமாக இருந்தாலும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கே அவர் முன்னுரிமை அளித்துள்ளார்.

இதற்கு முன்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் (2024) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (2025) அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

சிஎஸ்கே அணி தனது முதல் போட்டியில் வருகிற மார்ச் 30 அன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஜான்சன் வருகை அணியின் வேகப்பந்து வீச்சை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com