வருண் சக்கரவர்த்தி போராட்டம் வீண்: 2வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி

முதலில் ஆடிய இந்தியா 124 ரன்கள் எடுத்தது. அடுத்து இறங்கிய தென் ஆப்பிரிக்கா 19வது ஓவரில் வெற்றி பெற்றது.
வருண் சக்கரவர்த்தி போராட்டம் வீண்: 2வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி
Published on

கெபேஹா:

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடி வருகிறது.

முதல் டி20 போட்டியில் இந்திய அணி 61 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி கெபேஹாவில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 124 ரன்கள் எடுத்தது. ஹர்திக் பாண்ட்யா 39 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து, 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.

அந்த அணியின் ஸ்டப்ஸ் போராடி அணியை வெற்றி பெறச் செய்தார்.

இறுதியில், தென் ஆப்பிரிக்கா 19 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 128 ரன்கள் எடுத்து வென்றது. இதன்மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா டி20 தொடரை 1-1 என சமன் செய்தது.

இந்தியாவின் வருண் சக்கரவர்த்தி சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com