ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: சுப்மன் கில் அதிரடி சதம்

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது
shubman gill
Published on

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி லக்னோவில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் 4 ரன்னில் அவுட்டானார். ரோகித் சர்மா அதிரடியாக ஆடினார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 48 ரன்னில் அவுட்டானார்.

3வது விக்கெட்டுக்கு சுப்மன் கில்லுடன் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி முதலில் நிதானமாக ஆடியது. அதன்பின் அதிரடியில் இறங்கியது.

பொறுப்புடன் ஆடிய கேப்டன் சுப்மன் கில் சதமடித்து அசத்தினார். இது அவரது 9வது சதமாகும். அப்போது இந்திய அணி 2 விக்கெட்டுக்கு 33 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 266 ரன்கள் குவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com