காயத்திலிருந்து மீண்டு வரும் ஸ்ரேயாஸ் - லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரல்

ஷ்ரேயாஸ் ஐயர் பின்னோக்கி ஓடிச் சென்று பாய்ந்து அருமையாக கேட்ச் செய்தார். வலியால் அவதிப்பட்ட ஷ்ரேயாஸ் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார்.
காயத்திலிருந்து மீண்டு வரும் ஸ்ரேயாஸ் - லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரல்
Published on

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தின் போது ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி (24 ரன்) அடித்த பந்தை இந்திய அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பின்னோக்கி ஓடிச் சென்று பாய்ந்து அருமையாக கேட்ச் செய்தார். அப்போது மைதானத்தில் விழுந்ததில் அவரது இடது விலாப்பகுதி பலமாக இடித்தது. வலியால் அவதிப்பட்ட அவர் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார்.

'ஸ்கேன்' பரிசோதனை மேற்கொண்ட போது, மண்ணீரலில் கீறல் ஏற்பட்டு, அதனால் ரத்தக்கசிவு உருவாகி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அணி டாக்டரின் அறிவுறுத்தலின் பேரில் சிட்னியில் உள்ள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) ஷ்ரேயாஸ் ஐயர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

சில நாட்களிலேயே சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்நிலையில், காயத்திருந்து குணமடைந்த பின்பு இந்திய வீரர் ஸ்ரேயஸின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com