

மகளிர் டி20 கிரிக்கெட்டின் சிறந்த பேட்டர்கள் தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் முன்னணி பேட்டர் ஸ்மிரிதி மந்தனா 3-வது இடத்தில் இருந்து 4-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார்.
ஷபாலி வர்மா 2 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார். இவர் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 38 பந்தில் 57 ரன்கள் சேர்த்தார். இதனால் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.
ஸ்மிரிதி மந்தனா இரண்டு போட்டிகளிலும் முறையே 13 மற்றும் 12 ரன்கள் மட்டுமே சேர்த்தார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 2 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தை பிடித்துள்ளார். இவர் முதல் டி20 போட்டியில் ஆட்டமிழக்காமல் 47 ரன்கள் எடுத்திருந்தார்.