ஆப்கானிஸ்தான் தொடர்: வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி நெட் பவுலராக சேர்ப்பு

ஆப்கானிஸ்தான் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படாத நிலையில், தற்போது நெட் பவுலராக இணைக்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் தொடர்: வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி நெட் பவுலராக சேர்ப்பு
Published on

ஆப்கானிஸ்தான் டெஸ்ட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியில் ஜம்மு-காஷ்மீர் வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி தார் சேர்க்கப்படவில்லை. இது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. ஏனென்றால், நடந்து முடிந்த ரஞ்சி டிராபியில் ஜம்மு-காஷ்மீர் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனைப் படைத்தது. இதில் அகிப் நபி தார் 60 விக்கெட்டுகள் சாய்த்திருந்தார்.

இந்த நிலையில்தான் அகிப் நபி தார் இந்திய அணியில் நெட் பவுலராக சேர்க்கப்பட்டுள்ளார். அவருடன் மேலும் 7 பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளளனர்.

தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாடி வரும் பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் ஆகியோரால் இந்த கோடைக்காலத்தில் முழு உத்வேகத்தின் நெட்டில் பந்து வீச முடியாது. இதனால் இவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இதில் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த லெக் ஸ்பின்ர் ஜீசன் அன்சாரியும் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடியவர்.

X

Maalai Malar
www.maalaimalar.com