Sarah Taylor | ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான முதல் பெண்!

அவரைப் பற்றி எவ்வளவு புகழ்ந்து பேசினாலும் அது போதாது.
Sarah Taylor | ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான முதல் பெண்!
Published on

மகளிர் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கியவர்களில் ஒருவரான, இங்கிலாந்தின் முன்னாள் விக்கெட் கீப்பர் சாரா டெய்லர் , நியூசிலாந்துக்கு எதிரான வரவிருக்கும் தொடருக்கான மூத்த ஆண்கள் டெஸ்ட் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய இயக்குனர் ராப் கீ அறிவித்தார்.

அனைத்து வடிவங்களிலும் 226 போட்டிகளில் விளையாடியுள்ள 37 வயதான டெய்லர், ஆண்ட்ரூ ஃபிளின்டாஃபின் கீழ் இங்கிலாந்து லயன்ஸ் (இங்கிலாந்து 'ஏ') அணியுடனும் பணியாற்றியுள்ளார். அங்கு அவரது சிறப்பான செயல்பாடு, அவருக்கு மூத்த அணியின் துணை பணியாளர் குழுவிற்கு பதவி உயர்வை பெற்று கொடுத்துள்ளது.

டெய்லர், சசெக்ஸ் ஆண்கள் அணி மற்றும் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிகளுடனும் பணியாற்றியுள்ளார். மேலும், மும்பை இந்தியன்ஸ் அணியுடன் ஐ.பி.எல். பணியில் இருக்கும் கார்ல் ஹாப்கின்சனுடன் இணைந்து, ஃபீல்டிங் பயிற்சியாளராக ஒரு குறுகிய கால ஒப்பந்தமும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

"அவர் செய்யும் வேலையில், இந்த துறையில் மிகச் சிறந்தவர்களில் ஒருவர் என்று நான் நினைக்கிறேன். அவர் மிக சிறப்பாக செயல்பட்டுள்ளார், மேலும் அவர் ஆண்ட்ரூ ஃபிளின்டாஃப் மற்றும் எட் பார்னி (செயல்திறன் இயக்குநர்) ஆகியோருடன் நிறைய பணியாற்றியுள்ளார். அவர்களால் அவரைப் பற்றி எவ்வளவு புகழ்ந்து பேசினாலும் அது போதாது.

எனவே, நாம் பார்ப்பதில் இருந்து, அவர் இந்த துறையில் மிகச் சிறந்தவர்களில் ஒருவர். டெய்லரையும், அவர் தனது பணிகளை செய்யும் விதத்தையும் கண்டு நாங்கள் முழுமையாகவும் நம்பமுடியாத வகையிலும் ஈர்க்கப்பட்டோம்," என்று கீ கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com