இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: நியூசிலாந்து அணியுடன் இணைந்த முன்னணி சுழற்பந்து வீச்சாளர்

ஐ.பி.எல். தொடரின்போது காயம் அடைந்த சான்ட்னெர், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியில் இணைந்துள்ளார்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: நியூசிலாந்து அணியுடன் இணைந்த முன்னணி சுழற்பந்து வீச்சாளர்
Published on

நியூசிலாந்து அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னெர். இவர் டி20 அணி கேப்டனாக இருந்து வருகிறார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். அப்போது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகினார்.

நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. வரும் வியாழக்கிழமை லார்ட்ஸ் மைதானத்தில் முதல் டெஸ்ட் தொடங்குகிறது.

இந்த நிலையில் காயத்தில் இருந்து குணமடைந்ததால், இங்கிலாந்து தொடருக்கான நியூசிலாந்து அணியில் தற்போது சான்ட்னெர் இணைந்துள்ளார். இங்கிலாந்து சென்றுள்ள அவர் விரைவில் அணியுடன் இணைய உள்ளார்.

இங்கிலாந்து- நியூசிலாந்து இடையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. 2-வது டெஸ்ட் ஓவலிலும், 3-வது டெஸ்ட் நாட்டிங்காமிலும் நடக்க இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com