

மும்பை இந்தியன்ஸ் அணியின் ரியான் ரிக்கில்டன் மோசமான ஃபார்ம் காரணமாக கடந்த சில போட்டிகளில் அணியில் இடம்பெறவில்லை. இந்த நிலையில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய ரிக்கில்டன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான, கட்டாயம் வெற்றி பெற வேண்டிய ஐ.பி.எல். போட்டியில், மும்பை இந்தியன்ஸ் வீரர் ரிக்கில்டன் வெறும் 55 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்களுடன் ஆட்டமிழக்காமல் 123 ரன்கள் எடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணி 243 ரன்களை எடுக்க முக்கிய காரணமாக திகழ்ந்தார்.
29 வயதான ரிக்கில்டன் மும்பை இந்தியன்ஸ் பிரான்சைஸ்க்காக மூன்றாவது சதத்தை அடித்தார். இதன்மூலம், மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் இதுவரை இல்லாத அதிகபட்ச ஸ்கோரை எடுத்து, தங்களது நிலையை மீட்டெடுக்க ஒரு தீவிர முயற்சியை மேற்கொண்டது.
2008-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சனத் ஜெயசூரியா எடுத்த 114* ரன்களை முறியடித்து, ரிகல்டன் 123* ரன்கள் எடுத்து மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்களில் அதிக ரன்களை குவித்த வீரராகியுள்ளார்.
ஐ.பி.எல். 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தனது முதல் சதத்தை அடித்ததன் மூலம், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் சனத் ஜெயசூரியா , குயின்டன் டி காக் (112*), ரோஹித் சர்மா (109* மற்றும் 105*) மற்றும் சூர்யகுமார் யாதவ் (103*) ஆகியோரை பின்னுக்குத் தள்ளினார்.
நேற்றைய போட்டியில் ரிக்கில்டன் 44 பந்துகளில் சதம் அடித்தார், இது மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்களில் அதிவேகமானதாகும். இதன் மூலம், 2008-இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஜெயசூரியா 45 பந்துகளில் எடுத்த சாதனையை அவர் முறியடித்தார்.