20 ஓவர் உலக கோப்பை போட்டி இந்திய அணி தேர்வு குறித்து ரோகித் சர்மா-அகர்கர் ஆலோசனை

ஐ.பி.எல். போட்டியில் டெல்லியில் நேற்று நடந்த ஆட்டத்தில் மும்பை-டெல்லி அணிகள் மோதின.இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை ஜூன் 5-ந் தேதி எதிர்கொள்கிறது.
20 ஓவர் உலக கோப்பை போட்டி இந்திய அணி தேர்வு குறித்து ரோகித் சர்மா-அகர்கர் ஆலோசனை
Published on

புதுடெல்லி:

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது.

இந்தப் போட்டியில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை மே 1-ந் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) அறிவித்து இருந்தது.

20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் யார்-யார்? இடம் பெறுவார்கள்? என்று முன்னாள் வீரர்கள் நாள் தோறும் கணித்து வருகிறார்கள்.

ஐ.பி.எல். போட்டியில் வீரர்களின் செயல்பாடு குறித்து அணி தேர்வு இருக்கும் என்று கருதப்படுகிறது. ஐ.பி.எல். போட்டியில் டெல்லியில் நேற்று நடந்த ஆட்டத்தில் மும்பை-டெல்லி அணிகள் மோதின.

இந்தப் போட்டிக்கு பிறகு கேப்டன் ரோகித் சர்மா-தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் 20 ஓவர் உலக கோப்பை குறித்து ஆலோசனை நடத்துவார்கள் என்று தகவல் வெளியானது.

அதன்படி ரோகித் சர்மாவும் ரோகித் சர்மாவும் அகர்கரும் இன்று சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சதிப்புக்கு பிறகு வீரர்களின் தேர்வு இறுதி செய்யப்படும். நாளை அல்லது நாளை மறுநாள் இந்திய அணி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் வீராட் கோலி இடம் பெறுவார். அவர் தொடக்க வீரராக ஆடுவாரா? அல்லது 3-வது வீரராக ஆடுவாரா? என தெரியவில்லை.

சூர்யகுமார் யாதவ், ஜடேஜா, ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல் உள்ளிட்டோர் இடம் பெறுவார்கள். ரிங்குசிங், ஷிவம் துபே, சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தெரிகிறது.

இந்திய அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகி ஸ்தான், அமெரிக்கா, அயர்லாந்து, கனடா ஆகியவை உள்ளன. அந்த பிரிவில் இடம் பெற்றுள்ளன.

இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை ஜூன் 5-ந் தேதி எதிர்கொள்கிறது. 9-ந் தேதி பாகிஸ்தானுடனும், 12-ந் தேதி அமெரிக் காவுடனும் 15-ந் தேதி கனடாவுடனும் மோதுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com