Kolkata Knight Riders | துணைக் கேப்டன் ஆனார் ரிங்கு சிங்..!

கடைசி ஓவரில் தொடர்ந்து 5 சிக்சர்கள் அடித்து அணியை வெற்றி பெற வைத்ததன் மூலம் பிரபலம் ஆனார் ரிங்கு சிங்
ரிங்கு சிங்
ரிங்கு சிங்
Published on

ஐ.பி.எல். 2026 சீசன் வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி போட்டிக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் அந்த அணி நிர்வாகம் இன்று துணைக் கேப்டன் பெயரை அறிவித்தது. அந்த அணிக்காக ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் விளாசி பிரபலம் ஆன ரிங்கு சிங்குவை துணைக் கேப்டனாக அறிவித்துள்ளது.

2018-ல் இருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருக்கும் ரிங்கு சிங்குவை துணைக் கேப்டனாக அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சிஇஓ வெங்கி மைசூர் தெரிவித்தார்.

ரிங்கு சிங்குவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 13 கோடி ரூபாய்க்கு தக்கவைத்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் போட்டியில் 39-ந்தேதி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

ரிங்கு சிங்கு ஐபிஎல் கிரிக்கெட்டில் 59 போட்டிகளில் 1099 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 30.53 ஆகும். ஸ்டிரைக் ரேட் 145.18. 2024-ம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற கொல்கத்தா அணியில் இடம் பிடித்திருந்தார். சமீபத்தில் டி20 கோப்பையை வென்ற இந்திய அணியிலும் இடம் பிடித்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com