
பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் உள்ளார். இவர் மற்றும் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையில் பஞ்சாப் கிங்ஸ் அணி கடந்த முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதி போட்டியில் ஆர்.சி.பி. அணியிடம் தோல்வியடைந்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது.
இரண்டு முறை அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. 2014-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது.
இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்று சண்டிகரில் உள்ள சொந்த மைதானமான முல்லன்பூர் மைதானத்தில் ரிக்கி பாண்டிங், சாய்ராஜ் பகுதுலே, பிராட் ஹாடின் உள்ளிட்ட பயிற்சியாளர்கள் மற்றும் சப்போர்ட் ஸ்டாஃப் பூஜை போட்டனர்.