பரபரப்பான ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது பெங்களூரு

முதலில் ஆடிய பெங்களூரு 189 ரன்கள் குவித்தது. அடுத்து விளையாடிய ராஜஸ்தான் 182 ரன்கள் எடுத்தது.
பரபரப்பான ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது பெங்களூரு
Published on

பெங்களூரு:

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

பெங்களூருவில் இன்று மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற 32-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 189 ரன்கள் எடுத்தது. மேக்ஸ்வெல் 44 பந்தில் 4 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 77 ரன்கள் எடுத்து வெளியேறினார். டூ பிளசிஸ் 39 பந்தில் 2 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 62 ரன்கள் எடுத்தார்.

ராஜஸ்தான் அணி சார்பில் போல்ட், சந்தீப் சர்மா 2 விக்கெட், அஷ்வின், சஹல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் டக் அவுட்டானார்.

அடுத்து இறங்கிய தேவ்தத் படிக்கல், ஜெயிஸ்வாலுடன் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக ஆடிய படிக்கல் அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார். 2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 98 ரன்களை சேர்த்தது.

அரை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜெயிஸ்வால் 47 ரன்னில் ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன் 22 ரன்னில் அவுட்டானார். ஹெட்மயர் 3 ரன்னில் வெளியேறினார்.

இறுதியில், ராஜஸ்தான் அணி 182 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பெங்களூரு அணி பரபரப்பான ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 4-வது வெற்றியைப் பதிவு செய்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com