நீங்கள் என்ன செய்தீர்கள்?- சுப்மன் கில்லை பற்றி பேசுபவர்களுக்கு ரவி சாஸ்திரி கேள்வி

ரோகித் சர்மாவுக்கு பதில் சுப்மன் கில் இந்திய டெஸ்ட் அணி கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.சுப்மன் கில் வெளிநாட்டு மண்ணில் ரன் குவிக்க தவறியுள்ளார் என விமர்சனம் வைக்கப்படுகிறது.
நீங்கள் என்ன செய்தீர்கள்?- சுப்மன் கில்லை பற்றி பேசுபவர்களுக்கு ரவி சாஸ்திரி கேள்வி
Published on

இந்திய டெஸ்ட் அணி கேப்டனாக இருந்த ரோகித் சர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து விராட் கோலியும் ஓய்வு அறிவித்துள்ளார். இதனால் அடுத்த டெஸ்ட் அணி கேப்டன் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பும்ரா கேப்டனாக நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில் பும்ராவின் பணிச் சுமையை (Work Load) கருத்தில் கொண்டு சுப்மன் கில்லிடம் கேப்டன் பதவி ஒப்படைக்கப்படலாம் எனத் தெரிகிறது.

ஆனால் சுப்மன் கில் வெளிநாட்டு மண்ணில் சரியாக விளையாடவில்லை என்ற விமர்சனம் வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கூறுகையில் "சுப்மன் கில் வெளிநாட்டு மண்ணில் ரன்கள் அடிக்கவில்லை என பேசுவார்கள். வெளிநாட்டு மண்ணில் ரன்கள் அடிக்கவில்லை என்பது அடிக்கடி வரும் என்பது உங்களுக்கு தெரியும். சில நேரம் அவ்வாறு சொல்பவர்களிடம், நீங்கள் வெளிநாட்டு மண்ணில் எவ்வளவு ரன்கள் அடித்தீர்கள், எவ்வாறு விளையாடினீர்கள் என்று பாருங்கள் என்று சொல்வேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com