டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து நீடிப்பது கடினம்- ரஷித் கான்

டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து ஆடுவது எனக்கு கடினமான ஒன்றாகவே தோன்றுகிறது என்று ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் கூறியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து நீடிப்பது கடினம்- ரஷித் கான்
Published on

புதுடெல்லி:

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகனாக அசத்தினார்.

பின்னர் பேட்டி அளித்த ரஷித்கானிடம், ஜூன்-ந் தேதி இந்தியாவுக்கு எதிராக நடக்கும் டெஸ்ட் போட்டியில் ஆடுவது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் இப்போதைக்கு டெஸ்ட் போட்டியில் ஆடுவதில்லை என்று கூறினார். 2023-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு முதுகுவலி காயத்துக்கு ஆபரேஷன் செய்ததும் டாக்டர்கள் என்னிடம், 'தொடர்ந்து கிரிக்கெட் விளையாட விருப்பம் இல்லை என்றால், சிவப்பு நிற பந்து கிரிக்கெட்டை (டெஸ்ட்) விளையாடிக் கொண்டே இரு.

ஏனெனில் அந்த வகை போட்டி உனது உடலுக்கு ஒத்துழைக்காது. ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடும் வாய்ப்பு உனக்கு நீண்ட காலத்திற்கு நீடிக்காது' என்று எச்சரித்தனர். அதனால் உடல்தகுதி விஷயத்தில் மிகவும் கவனமுடன் இருக்கிறேன். 2027-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு என்னை சிறந்த முறையில் தயார்படுத்த வேண்டும்.

அந்த டெஸ்ட் போட்டியில் விளையாடி முதுகில் ஏதாவது பிரச்சினை நிகழ்ந்தால் என்ன செய்வது ? டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து ஆடுவது எனக்கு கடினமான ஒன்றாகவே தோன்றுகிறது. வருடத்திற்கு ஒரு டெஸ்ட் என்றால் ஏற்றுக்கொள்வேன். அதற்கு மேல் என்னால் விளையாட முடியும் என்று நினைக்கவில்லை' என்று ரஷித்கான் குறிப்பிட்டார். 27 வயதான ரஷித்கான் இதுவரை 6 டெஸ்டில் விளையாடி 45 விக்கெட் எடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com