ரஞ்சி கோப்பை அரையிறுதி: 141 ரன்கள் விளாசிய கே.எல். ராகுல்

153 பந்தில் சதம் அடித்து, 141 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.2-வது விக்கெட்டுக்கு தேவ்தத் படிக்கல் உடன் சேர்ந்து 278 ரன்கள் குவித்தார்.
ரஞ்சி கோப்பை அரையிறுதி: 141 ரன்கள் விளாசிய கே.எல். ராகுல்
Published on

ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டிகள் இன்று தொடங்கின. லக்னோவில் நடைபெற்று வரும் முதல் அரையிறுதியில் கர்நாடகா- உத்தரகாண்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற உத்தரகாண்ட் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி கர்நாடகா அணியின் கே.எல். ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மயங்க் அகர்வால் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து கே.எல். ராகுல் உடன் தேவ்தத் படிக்கல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் அடுத்தடுத்து சதம் விளாசினர்.

கே.எல். ராகுல் 153 பந்தில் சதம் அடித்தார். தேவ்தத் படிக்கல் 144 பந்தில் சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய கே.எல். ராகுல் 211 பந்தில் 141 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு கே.எல். ராகுல்- தேவ்தத் படிக்கல் ஜோடி 278 ரன்கள் குவித்தது. கே.எல். ராகுல் ஆட்டமிழக்கும்போது கர்நாடகா 2 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் குவித்திருந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com