PSL 2026| VIDEO: மாட்டிக்கிட்ட பங்கு... பந்தை சேதப்படுத்திய ஃபகார் சமான்- தடை விதிக்க வாய்ப்பு

பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடரின் போது, லாகூர் வீரர் ஃபகார் சமான் பந்தை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
PSL 2026| VIDEO: மாட்டிக்கிட்ட பங்கு... பந்தை சேதப்படுத்திய ஃபகார் சமான்- தடை விதிக்க வாய்ப்பு
Published on

பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் கராச்சி கிங்ஸ் - லாகூர் அணிகள் மோதின. இந்த போட்டியில் லாகூர் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கு இடையிலான பரபரப்பான ஆட்டத்தின் போது, லாகூர் வீரர் ஃபகார் சமான் பந்தை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

லாகூர் கலாண்டர்ஸ் மற்றும் கராச்சி கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான போட்டியின் போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. கராச்சி அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்டது. அந்தச் சமயத்தில், மைதானத்தில் இருந்த கேமரா காட்சிகளில் ஃபக்கர் ஜமான், கேப்டன் ஷாஹீன் அப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரவுப் ஆகியோர் பந்தை வேகமாக மாற்றிக் கொள்வது போன்ற காட்சிகள் பதிவாகின.

இதை கவனித்த கள நடுவர் பைசல் அப்ரிடி, உடனடியாக பந்தை வாங்கி ஆய்வு செய்தார். மற்றொரு நடுவர் ஷர்புத்தௌலாவுடன் கலந்தாலோசித்த பிறகு, லாகூர் அணி பந்தின் தன்மையை மாற்ற முயன்றதை உறுதி செய்தனர். இதற்கான தண்டனையாக கராச்சி கிங்ஸ் அணிக்கு 5 பெனால்டி ரன்கள் வழங்கப்பட்டன.

இந்த விவகாரத்தில் லெவல்-3 குற்றச்சாட்டின்கீழ் ஃபக்கர் ஜமான் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக மேட்ச் ரெப்ரி ரோஷன் மகாநாம தலைமையில் விசாரணை நடத்தப்பட உள்ளது. இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்படலாம். அடுத்த 48 மணி நேரத்திற்குள் இந்த விவகாரத்தில் இறுதி தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com