500 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த அஸ்வின்: பிரதமர் மோடி வாழ்த்து

இந்திய பந்துவீச்சாளர் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார்.500 விக்கெட் வீழ்த்தி சாதனை புரிந்த அஸ்வினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
500 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த அஸ்வின்: பிரதமர் மோடி வாழ்த்து
Published on

புதுடெல்லி:

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின், ஜாக் கிராலி விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட் எடுத்த 2வது இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனை படைத்தார்.

அனில் கும்ப்ளே டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.

இந்நிலையில், டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட் வீழ்த்தி சாதனை புரிந்த அஸ்வினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாழ்த்துகள். அவரது பயணம் மற்றும் சாதனைகள் அவரது திறமை மற்றும் விடாமுயற்சிக்கு சான்றாகும். அவர் மேலும் சிகரங்களை எட்டிப்பிடிக்க எனது மனமார்ந்த வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com