

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜேக் எட்வர்ட்ஸ் (ஆல்-ரவுண்டர்) இடம் பிடித்திருந்தார். இவர் கால் பாதத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த சீசனில் இருந்து விலகியுள்ளார்.
இதனால் அவருக்கு மாற்றாக இங்கிலாந்தைச் சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரான டேவிட் பெய்ன் என்பவரை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
இவருக்கு 35 வயது ஆகிறது. என்றாலும் சிறப்பாக பந்து வீசி வருகிறார். இங்கிலாந்து ஒருநாள் அணியில் 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகம் ஆனார். ஆனால் காயம் காரணமாக தொடர்ந்து அவரால் தேசிய அணியில் இடம் பிடிக்க முடியவில்லை. அதனால் டெஸ்ட் போட்டியை தவிர்த்தார். தற்போது டி20 கிரிக்கெட் போட்டிகளில் மடடும் விளையாடி வருகிறார்.
இதுவரை 233 டி20 போட்டிகளிலும் விளையாடி 304 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சராசரி 21.16 ஆகும். ஓவருக்கு 8.03 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார்.
இரண்டு வருடத்திற்கு முன்னதாக கிளவுஸ்டர்ஷைர் அணிக்காக விடாலிட்டி பிளாஸ்ட் தொடரில் 33 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். 2026 ஜனவரியில் ILT20 தொடரில் டெசர்ட் வைபர்ஸ் அணிக்காக விளையாடினார். டெசர்ட் வைபர்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.
பிக்பாஷ் லீக் இறுதிப் போட்டியில் சிறப்பாக பந்து வீசினார். 18 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.