

ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வென்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி லாகூரில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு முதல் பந்தில் அலெக்ஸ் கேரி டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். மேத்யூ ஷார்ட் 15 ரன்னும், லாபுசேன் 5 ரன்னும் எடுத்து வெளியேறினர்.
4வது விக்கெட்டுக்கு இணைந்த ஜோஷ் இங்கிலீஸ்-கேமரூன் கிரீன் ஜோடி 51 ரன்களை சேர்த்த நிலையில் ஜோஷ் இங்கிலீஸ் அரை சதம் கடந்து 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.
5வது விக்கெட்டுக்கு கேமரூன் கிரீன்-மேட் ரென்ஷா ஜோடி 65 ரன்கள் சேர்த்த நிலையில் கேமரூன் கிரீன் 53 ரன்னில் அவுட்டானார். மேட் ரென்ஷா 43 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 231 ரன்களை சேர்த்தது.
பாகிஸ்தான் சார்பில் ஷாஹீன் அப்ரிடி 3 விக்கெட்டும், அராபத் மினாஸ், அப்ரார் அகமது, ஹரிஸ் ராப் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்குகிறது.