

வங்கதேசம், பாகிஸ்தான் இடையிலான 2வது டெஸ்ட் சிலெட்டில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய வங்கதேசம் அணி முதல் இன்னிங்சில் 278 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. லிட்டன் தாஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்து 126 ரன்னில் அவுட்டானார்.
பாகிஸ்தான் சார்பில் குர்ரம் ஷசாத் 4 விக்கெட்டும், முகமது அப்பாஸ் 3 விக்கெட்டும், ஹசன் அலி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 232 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாபர் அசாம் அரைசதம் கடந்து 68 ரன்னில் ஆட்டமிழந்தார்.
வங்கதேசம் சார்பில் தஜ்ஜுல் இஸ்லாம், நஹித் ரானா தலா 3 விக்கெட்டும், தஸ்கின் அகமது, மெஹிதி ஹசன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 46 ரன்கள் முன்னிலை பெற்ற வங்கதேசம் இரண்டாவது இன்னிங்சில் 390 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முஷ்பிகுர் ரஹிம் 137 ரன்னும், லிட்டன் தாஸ் 69 ரன்னும், மஹ்முதுல் ஹசன் ஜாய் 52 ரன்னும் எடுத்தனர்.
பாகிஸ்தான் சார்பில் குர்ரம் ஷசாத் 4 விக்கெட்டும், சஜித் கான் 3 விக்கெட்டும், ஹசன் அலி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, நான்காம் நாளில் 437 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.
கேப்டன் ஷான் மசூத் அரை சதம் கடந்து 71 ரன்னில் வெளியேறினார். 162 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து தத்தளித்த நிலையில் சல்மான் ஆகா- முகமது ரிஸ்வான் ஜோடி நிதானமாக ஆடியது. இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 143 ரன்கள் சேர்த்த நிலையில் சல்மான் ஆகா 71 ரன்னில் ஆட்டமிழந்தார்.
நான்காம் நாள் முடிவில் பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்புக்கு 316 ரன்கள் எடுத்துள்ளது. முகமது ரிஸ்வான் 75 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
வங்கதேசம் சார்பில் தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட்டும், நஹித் ரானா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
நாளை கடைசி நாள். மீதமுள்ள 3 விக்கெட்டுகளை வீழ்த்தி டெச்ட் தொடரை 2-0 என கைப்பற்ற வங்கதேசம் முயற்சிக்கும்.
இதேபோல் 121 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று தொடரை 1-1 என சமனில் முடிக்க பாகிஸ்தான் போராடும் என்பதால் இன்றைய போட்டு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.