

தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில், 3-வது போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது.
டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா அணியால் 9 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. ஜார்ஜ் லிண்டே 23 ரன்களும், மொகொயேனா 26 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து அணி சார்பில் கைல் ஜேமிசன், சான்ட்னெர், பென் சியர்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர் 137 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர் டாம் லாதம் ஆட்டமிழக்காமல் 55 பந்தில் 63 ரன்கள் சேர்த்தார். இதனால் நியூசிலாந்து 16.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கான்வே 39 ரன்களும், டிம் ராபின்சன் 17 ரன்களும் அடித்தனர்.
இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது. 4-வது போட்டி வெலிங்டனில் நாளைமறுதினம் (ஞாயிற்றுக் கிழமை) நடக்கிறது.