பாதுகாப்பு, கூட்டம் எதுவுமின்றி ஆனந்த குளியல் போட்ட சிராஜ், பிரசித் கிருஷ்ணா: வைரலாகும் வீடியோ

இருவரும் விளம்பர வெளிச்சத்திலிருந்து விலகி இயற்கையை அமைதியாக ரசித்துக் கொண்டிருந்தனர்.
siraj, prasidh krishna
Published on

இமாசலப் பிரதேசத்தில் உள்ள ஆற்றில் இந்திய கிரிக்கெட் வீரர்களான முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அமைதியாக நீந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இமாசலப் பிரதேசத்தில் படமாக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்தக் காணொளியில் சிராஜும் பிரசித்தும் மலைகளும் பசுமையும் சூழ்ந்த ஒரு தூய்மையான ஆற்றில் அமைதியாக நீந்தி மகிழ்வது படமாக்கப்பட்டுள்ளது.

இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்தது, இந்தத் தருணத்தின் எளிமைதான். பலத்த பாதுகாப்பு இல்லை, ரசிகர் கூட்டம் இல்லை, அவர்கள் இருவரும் விளம்பர வெளிச்சத்திலிருந்து விலகி அந்த இயற்கையை அமைதியாக ரசித்துக்கொண்டிருந்தனர்.

இந்த வீடியோவை வைத்து இணையதள வாசிகள் ஆதரவாகவும், எதிர்த்தும் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். பல பயனர்கள் இமாசலில் காணப்படும் அமைதியான சூழலையும் தூய்மையான ஆற்று நீரையும் பாராட்டி தள்ளினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com