

இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 3வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் லாதம், டேவன் கான்வே ஆகியோர் களமிறங்கினர்.
இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இந்த ஜோடியைப் பிரிக்க இங்கிலாந்து பவுலர்கள் கடும் சிரமப்பட்டனர். சிறப்பாக ஆடிய இருவரும் சதமடித்து அசத்தினர்.
முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 361 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து 438 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து சார்பில் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டும், ஜோப்ரா ஆர்ச்சர், ஷோயப் பஷீர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்குகிறது.