சதத்தை தவறவிட்ட பாக்ஸ்கிராப்ட்: நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 490 ரன்னுக்கு டிக்ளேர்

நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா, டாம் பிளென்டெல் சதமடித்து அசத்தினர்.
blundell
Published on

அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நியூசிலாந்து ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நேற்று பெல்பாஸ்டில் தொடங்கியது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இதனால் அந்த அணி 86 ரன் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

5வது விக்கெட்டுக்கு ரச்சின் ரவீந்திரா, டாம் பிளெண்டல் ஜோடி பொறுப்புடன் ஆடி 217 ரன்கள் சேர்த்தது. ரச்சின் ரவீந்திரா 121 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிறப்பாக விளையாடிய டாம் பிளெண்டெல் 186 ரன்னில் வெளியேறினார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாக்ஸ்கிராப்ட் 98 ரன்னில் அவுட்டானார்.

இதையடுத்து, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 490 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது.

அயர்லாந்து சார்பில் மார்க் அடைர் 3 விக்கெட் வீழ்த்தினார்.

தொடர்ந்து ஆடிய அயர்லாந்து முதலில் விக்கெட்டுகளை விரைவில் இழந்தது. 38 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

7வது விக்கெட்டுக்கு இணைந்த ஆண்டி மெக் பெரின் - மார்க் அடைர் ஜோடி நிதானமாக ஆடியதால் அந்த அணி 100 ரன்களைக் கடந்து விளையாடி வருகிறது.

நியூசிலாந்தின் நாதன் ஸ்மித் 5 விக்கெட் வீழ்த்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com