மகளிர் டி20 உலகக் கோப்பை: நெதர்லாந்து வெற்றிபெற 210 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

இந்திய அணி மகளிர் டி20 உலகக் கோப்பையை இதுவரை கைப்பற்றவில்லை.
mandana
Published on

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை வெல்லுமா என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

குரூப் 1 பிரிவில் இந்திய அணி இடம்பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்காளதேசம், நெதர்லாந்து ஆகிய அணிகளும் அந்தப் பிரிவில் உள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்திய அணி இன்று நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா தொடக்க வீராங்கனைகளாக இறங்கினர்.

இருவரும் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தனர்.

ஷபாலி வர்மா டி20 உலகக் கோப்பையில் முதல் அரை சதத்தைப் பதிவு செய்தார். அவர் 55 ரன்னில் அவுட்டானார். முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்தது. ஸ்மிருதி மந்தனா அரை சதம் கடந்து 74 ரன்னில் வெளியேறினார்.

ஜெமிமா ரோட்ரிக்ஸ் 20 ரன்னும், யஸ்திகா பாட்டியா 3 ரன்னிலும், ஹர்மன்பிரீத் கவுர் 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 209 ரன்கள் குவித்தது.

இதையடுத்து, 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்குகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com