7-வது விக்கெட்டுக்கு மாஸ் பார்ட்னர்ஷிப்.. இலங்கைக்கு எதிராக நெதர்லாந்து 262 ரன்கள் குவிப்பு

டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.ஒரு கட்டத்தில் நெதர்லாந்து அணி 91 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
7-வது விக்கெட்டுக்கு மாஸ் பார்ட்னர்ஷிப்.. இலங்கைக்கு எதிராக நெதர்லாந்து 262 ரன்கள் குவிப்பு
Published on

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று காலை நடைபெற்ற ஆட்டத்தில் நெதர்லாந்து - இலங்கை அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். ஒரு கட்டத்தில் நெதர்லாந்து அணி 91 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதனையடுத்து சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்- லோகன் வான் பீக் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இலங்கை அணியின் பந்து வீச்சை அருமையாக எதிர் கொண்ட இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். 70 ரன்கள் எடுத்த போது சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 130 ரன்கள் குவித்தது.

இறுதியில் நெதர்லாந்து அணி 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 262 ரன்கள் குவித்தது. இலங்கை அணி தரப்பில் தில்ஷான் மதுஷங்க, ரஜிதா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com