மும்பை இந்தியன்ஸ் அணியில் மூத்த வீரர்கள் மாற்றம் செய்யப்படுவார்களா? - கீரன் பொல்லார்ட் பதில்

நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது குறித்த கேள்விகளுக்கு கீரன் பொல்லார்ட் பதிலளித்தார்.
Mumbai indians kieran pollard about mumbai elimination
Published on

2026ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் 14 போட்டிகளில் விளையாடிய ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி வெறும் 4 வெற்றிகளை மட்டுமே பெற்று 10 ஆட்டங்களில் தோல்வியை தழுவியது.

இதன்மூலம் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி, பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.

இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் மகிளா ஜெயவர்தனே மற்றும் அணியின் மூத்த வீரர்கள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கீரன் பொல்லார்ட், “உண்மையை சொல்லப்போனால், சீசனின் முடிவில் ஒருவேளை இது நடந்திருந்தால், நாங்கள் இதைச் செய்திருந்தால், அதைச் செய்திருந்தால்.... என்று கொஞ்சம் தோன்றும்.

இது எங்கள் அனைவருக்கும் ஏமாற்றமாகவே அமைந்துள்ளது. இந்த சீசனில் ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் பாண்டியா போன்ற மூத்த வீரர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினர்.

மும்பை அணியில் ஒரு பெரிய மறுசீரமைப்பு தேவையா என்பது குறித்த கேள்விகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. இருப்பினும் எதிர்காலம் தொடர்பான எந்தவொரு முடிவும் கவனமான மதிப்பீட்டிற்கு பிறகே எடுக்கப்படும்” என்று கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com