

ஐ.பி.எல். 2026 சீசன் வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. இதற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ரசிகர்களை மகிழ்விப்பதற்காக Roar at Cheapuk என்ற பிரமாண்ட கலை மற்றும் விளையாட்டு நிகழ்ச்சியை இன்று நடத்தி வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இநதில் ஏ.ஆர். ரகுமான் கலைநிகழ்ச்சி நடக்கிறது.
இந்த விழாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய நட்சத்திர வீரர்கள் வரவழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.
சென்னை அணி இதுவரை 5 முறை சாம்பியன் பட்டம் வென்றது. இந்த 5 கோப்பைகளையும் முன்னாள் வீரர்கள் சுமந்து வந்தனர்.
எம்.எஸ். டோனி சஞ்சு சாம்சன் மற்றும் ஷிவம் துபேவுக்கு பெரிய விசில் அடங்கிய போட்டோவை வழங்கி கவுரவித்தார். இருவரும் டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடினார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் கவுரவிக்கப்பட்டனர்.
அதேபோல் ஹெய்டன் மற்றும் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இணைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.