ஒருநாள் போட்டியில் அறிமுகம்.. முதல் 3 ஓவரில் 24 ரன்கள்.. 7 வைடு வீசிய பதிரானா

முதல் 3 ஓவரிலேயே 7 வைடு வீசினார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பந்து வீசி வரும் பதிரனா 4 ஓவர்களை வீசி 33 ரன்களை விட்டுக்கொடுத்து உள்ளார். ர்
ஒருநாள் போட்டியில் அறிமுகம்.. முதல் 3 ஓவரில் 24 ரன்கள்.. 7 வைடு வீசிய பதிரானா
Published on

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி பேட்டிங் செய்த இலங்கை அணி 50 முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 268 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்த போட்டியில் இலங்கை அணியில் இடம் பிடித்திருக்கும் பதிரனா ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார். இவர் ஏற்கனவே கடந்த ஆண்டு இலங்கை டி20 அணியில் இடம்பிடித்தார். தற்போது சிஎஸ்கேவில் டெத் ஓவரில் கலக்கிய பதிரானா ஒரு நாள் தொடரில் அறிமுகமாகிறார்.

இந்நிலையில் இந்த போட்டியில் பந்து வீசி வரும் பதிரனா 4 ஓவர்களை வீசி 33 ரன்களை விட்டுக்கொடுத்து உள்ளார். முதல் 3 ஓவரிலேயே 7 வைடு வீசினார். அதில் வைடு பந்தில் ஒரு பவுண்டரி சென்றது குறிப்பிடத்தக்கது.

பதிரனா சென்னை அணிக்காக சிறப்பாக வீசினார். அதனால் சென்னை ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதனையடுத்து இவரின் அறிமுக ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது என கூறலாம். இந்த போட்டியை பார்த்த ரசிகர்கள் சோகமான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் பலர் இன்னும் 6 ஓவர்கள் உள்ளது. அதில் மீண்டும் எழுவார் எனவும் சிலர் கூறி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com