

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா 3 ஆவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது.
இறுதிப்போட்டியில் சஞ்சு சாம்சன் அபாரமாக விளையாடி 89 ரன்கள் விளாசி உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இந்த தொடரில் தொடக்கத்தில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன்பின் கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டார். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான வாழ்வா? சாவா? போட்டியிலும், அதன்பின் இங்கிலாந்துக்கு எதிராக அரையிறுதியில் அரைசதம் அடித்தார்.
தொடர்ந்து மூன்று அரைசதங்கள் விளாசிய சஞ்சு சாம்சன் இந்த தொடரில் 5 போட்டிகளில் 321 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் ஒரு டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்து தொடர் நாயகன் விருதையும் வென்று அசத்தியுள்ளார்.
சஞ்சு சாம்சனின் இந்த சிறப்பான ஆட்டத்தால் தான் இந்தியா கோப்பையை கைப்பற்றியது என்று சொன்னால் அது மிகையாகாது. அவ்வகையில் சஞ்சு சாம்சனின் மறக்கமுடியாத இந்த உலகக்கோப்பை ஆட்டத்தை பாராட்டி பிரபல மலையாள நடிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்மூட்டி, மோகன்லால் மற்றும் பிரித்விராஜ் ஆகியோர் சஞ்சு சாம்சனை புகழ்ந்து பதிவிட்டுள்ளனர்.
Team India are World Champions! The first to defend the T20 title! Outstanding campaign barring a hiccup against the Proteas. But the real fairy tale within the tournament is the script that destiny wrote for Sanju Samson! From being doubtful of even making it to the 15, to… pic.twitter.com/cbs47EYe60