ஷிவம் சிங் அசத்தல் சதம்: 201 ரன்களை குவித்தது திண்டுக்கல்

டாஸ் வென்ற மதுரை பவுலிங் தேர்வு செய்தது.முதலில் ஆடிய திண்டுக்கல் அணி 201 ரன்களை குவித்தது.
ஷிவம் சிங் அசத்தல் சதம்: 201 ரன்களை குவித்தது திண்டுக்கல்
Published on

திண்டுக்கல்:

டி.என்.பி.எல். தொடரின் லீக் ஆட்டங்கள் தற்போது திண்டுக்கல்லில் நடந்து வருகின்றன. இன்று நடைபெறும் 24-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மதுரை அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, திண்டுக்கல் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷிவம் சிங் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார்.

சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.

விமல் குமார் 23 ரன்னிலும், பாபா இந்திரஜித் 29 ரன்னிலும், சரத் குமார் 19 ரன்னிலும் அவுட்டாகினர்.

பொறுப்புடன் ஆடிய ஷிவம் சிங் 56 பந்தில் சதமடித்து அசத்தினார்.

இறுதியில், திண்டுக்கல் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 201 ரன்களைக் குவித்துள்ளது. நடப்பு தொடரில் முதல் சதமடித்த ஷிவம் சிங் 106 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதில் 10 சிக்சர், 6 பவுண்டரிகளும் அடங்கும்.

இதையடுத்து, 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்குகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com