பரபரப்பான ஆட்டத்தில் 1 ரன் வித்தியாசத்தில் திருப்பூரை வீழ்த்தியது கோவை கிங்ஸ்

துஷார் ரஹேஜா 81 ரன்னில் ஆட்டமிழந்தனர். கோவை தரப்பில் முகமது, ஷாருக்கான் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
பரபரப்பான ஆட்டத்தில் 1 ரன் வித்தியாசத்தில் திருப்பூரை வீழ்த்தியது கோவை கிங்ஸ்
Published on

சேலம்:

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 8-வது சீசன் நேற்று சேலத்தில் தொடங்கியது. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதலில் நடைபெற்ற ஆட்டத்தில் சேப்பாக் அணியை நெல்லை அணி வீழ்த்தியது.

இந்நிலையில், இரவு 7.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ்-திருப்பூ தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற கோவை அணி பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி, கோவை அணி முதலில் களமிறங்கியது. கேப்டன் ஷாருக் கான் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 55 ரன்னில் அவுட்டானார். சச்சின் 30 ரன்னிலும், சுஜய் 27 ரன்னிலும் அவுட்டாகினர். இறுதியில், கோவை அணி 7 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களை எடுத்துள்ளது.

இதையடுத்து திருப்பூர் அணியின் தொடக்க வீரர்களாக துஷார் ரஹேஜா- ராதாகிருஷ்ணன் களமிறங்கினர். இதில் ராதாகிருஷ்ணன் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சாத்விக் 12, விஜய் சங்கர் 16, பாலசந்தர் 4 என அடுத்தடுத்து வெளியேறினார். இதனையடுத்து துஷார் ரஹேஜா- முகமது அலி ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.

எளிதாக வெற்றியை உறுதி செய்யும் அளவில் விளையாடிய நிலையில் 35 ரன்னில் முகமது அலியும் 81 ரன்னிலும் துஷார் ரஹேஜாவும் ஆட்டமிழந்தனர். இதனால் ஆட்டம் பரபரப்பானது. இறுதியில் 1 ரன் வித்தியாசத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. கோவை தரப்பில் முகமது, ஷாருக்கான் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com