சாய் சுதர்சன் அரை சதம் - 8 விக்கெட் வித்தியாசத்தில் கோவை அணி அபார வெற்றி

முதலில் ஆடிய சேப்பாக் 126 ரன்கள் எடுத்தது.அடுத்து ஆடிய கோவை 128 ரன்கள் எடுத்து வென்றது.
பொறுப்புடன் ஆடிய சுரேஷ்குமார், சாய் சுதர்சன் ஜோடி
பொறுப்புடன் ஆடிய சுரேஷ்குமார், சாய் சுதர்சன் ஜோடி
Published on

திண்டுக்கல்:

டி.என்.பி.எல். போட்டியின் 9-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் இன்று இரவு நடந்தது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், லைக்கா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 126 ரன்களே எடுத்தது. அதிகபட்சமாக ஹரிஷ் குமார் 32 ரன்கள் அடித்தார். சசிதேவ் 23 ரன்கள் அடித்தார்.

கோவை கிங்ஸ் சார்பில் வள்ளியப்பன் யுதீஸ்வரன் 3 விக்கெட் கைப்பற்றினார்.

இதையடுத்து, 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கோவை கிங்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டகாரர் சச்சின் 14 ரன்னில் அவுட்டானார்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சுரேஷ்குமாருடன் சாய் சுதர்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. அரை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுரேஷ்குமார் 47 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், கோவை அணி 16.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்து வென்றது. சாய் சுதர்சன் 64 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com