வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் இருந்து குசல் பெரேரா விலகல்

முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சில்ஹெட்டில் நாளை நடக்கிறது. முதல் 2 ஆட்டங்களுக்கு அசலங்கா கேப்டனாக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் இருந்து குசல் பெரேரா விலகல்
Published on

கொழும்பு:

வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர், 3 ஒரு நாள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சில்ஹெட்டில் நாளை நடக்கிறது.

இந்த நிலையில் இலங்கை அணியின் விக்கெட் கீப்பரான குசல் பெரேரா சுவாச பிரச்சினை காரணமாக 20 ஓவர் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக நிரோஷன் டிக்வெல்லா சேர்க்கப்பட்டுள்ளார். அவர் ஒரு ஆண்டுக்கு பிறகு அணிக்கு திரும்புகிறார்.

நடுவருடன் வாக்குவாதம் செய்ததால் 2 ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்பட்ட இலங்கை அணியின் கேப்டன் ஹசரங்கா முதல் இரு ஆட்டங்களில் விளையாட முடியாத நிலையில் குசல் பெரேராவும் விலகுவது அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. முதல் 2 ஆட்டங்களுக்கு அசலங்கா கேப்டனாக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com