ஐபிஎல் வரலாற்றில் இப்படி ஒரு ரிவ்யூ யாரும் எடுத்ததில்லை- வைரலாகும் வீடியோ

குல்தீப் யாதவ் ஓவரில் பட்லர் எல்பிடபிள்யூ ஆவார்.இதற்கு களநடுவர் அவுட் இல்லை என தெரிவித்து விடுவார்.
ஐபிஎல் வரலாற்றில் இப்படி ஒரு ரிவ்யூ யாரும் எடுத்ததில்லை- வைரலாகும் வீடியோ
Published on

ஐபிஎல் தொடரின் 9-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் கேப்பிட்டல்ஸ் டெல்லி அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி ரியான் பராக்கின் அதிரடியால் 185 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து விளையாடிய டெல்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. இதனால் ராஜஸ்தான் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் புள்ளிபட்டியலில் 2-வது இடத்தை ராஜஸ்தான் அணி பிடித்துள்ளது.

முன்னதாக இந்த போட்டியின் போது குல்தீப் யாதவ் ஓவரில் பட்லர் எல்பிடபிள்யூ ஆவார். அதற்கு களநடுவர் அவுட் இல்லை என தெரிவிப்பார். இதனை பார்த்த கேப்டன் ரிஷப் யோசித்துக் கொண்டே வருவார். பந்து வீசிய குல்தீப் யாதவ் வேகமாக ரிஷப் பண்டை நோக்கி வந்து ரிவ்யூ எடுங்கள் என கூறியது மட்டுமல்லாமல் அவரது கையை பிடித்து ரிவ்யூ சைகையை காட்டுவார். 

உடனே ரிஷப் பண்ட் சிரித்துக் கொண்டே ரிவ்யூ எடுப்பார். பந்து வீச்சாளர் கேப்டனிடம் சென்று ரீவ்யூ எடுங்கள் என்று சொல்வது இயல்பு. ஆனால் குல்தீப் யாரும் செய்யாத வகையில் இப்படி ஒரு ரிவ்யூவை எடுத்தது சிரிப்பலையை ஏற்படுத்தியது.

சந்தேகத்துடன் 3-வது நடுவரிடன் சென்றது. இறுதியில் அது 3-வது நடுவரால் அவுட் என வந்தது. இதனால் ரிஷப் பண்ட் மகிழ்ச்சியடைந்தார். இந்த தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கு ரசிகர்கள் கேப்டனை கட்டாயப்படுத்தி ரிவ்யூ எடுக்க வைக்குராங்க என்றும் சிலர் ஐபிஎல் வரலாற்றில் இப்படி ரிவ்யூ-வை நான் பார்த்ததில்லை எனவும் காமெடியாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com